புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 8 ஏப்ரல் 2019 (12:01 IST)

பூஜையுடன் தொடங்கியது சூர்யாவின் அடுத்த படம்

நடிகர் சூர்யாவின் புது படம் பூஜையுடன் துவங்கியது!
நடிகர் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே' மற்றும் கேவி ஆனந்த் இயக்கத்தில்  'காப்பான்' ஆகிய இரண்டு படங்களில் நடித்துவந்தார். சமீபத்தில் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்ததையடுத்து தற்போது சூர்யா தனது 38 வது படத்தில் நடிக்க தயாராகிவிட்டார்.
 
'இறுதிச்சுற்று' இயக்குனர் சுதா கொங்காரா இயக்கவுள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 
மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தில் பஹத் பாசில் ஜோடியாக அறிமுகமான இவர் தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மையம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அதனையடுத்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவிற்கு ஜோடியாகும் அதிஷ்டம் சூர்யா படம் மூலமாக இவரை தேடி வந்துள்ளது.
 
ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார் , இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சிக்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும்  இணைந்து தயாரிக்கவுள்ளது.
 
இப்படத்தின் பூஜை நேற்று நடந்ததையடுத்து படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்குகிறது.