திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 28 மார்ச் 2019 (12:47 IST)

எனக்காக அப்பா வாய்ப்புக் கேட்டதில்லை.. ஆனாலும்... சூர்யா உருக்கம்

எனக்காக என் அப்பா வாய்ப்புக் கேட்டதில்லை என்றாலும் ஒரு நடிகரின் மகன் என்ற அடையாளம் எனக்கு இருக்கிறது என்று நடிகர் சூர்யா பேசினார். 
 
சூர்யாவின் 2டி எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள உறியடி 2 படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் தயாரிப்பாளர் சூர்யா, இயக்குனர் விஜயகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
 
விழாவில் பேசிய சூர்யா, `ஒருவர், சினிமாவுக்காக இவ்வளவு உண்மையாக இருக்க முடியுமா என்ற பிரமிப்பையும், ஆச்சரியத்தையும் இயக்குனர் விஜயகுமார் என்னுள் ஏற்படுத்தினார். ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதில் எவ்வளவு தூரம் உண்மையாக பயணிக்க முடியும் என்பதை அறிந்து, அந்த அளவுக்கு பயணித்து அதை வெளிக்கொணர்பவர் விஜயகுமார்.
 
எங்க அப்பா நான் நடித்த படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததில்லை. எனக்காக யாரிடமும் வாய்ப்பு கேட்டது கிடையாது. ஒரு இயக்குனர், தயாரிப்பாளரை சந்தித்தது கிடையாது. கதை கேட்டது கிடையாது. இருந்தாலும், ஒரு நடிகரின் மகன் என்ற அடையாளம் எனக்கு இருக்கிறது. ஆனால் எந்த ஒரு அடையாளமும் இல்லாமல், உறியடி படத்தை எடுத்த விஜயகுமார் ஆச்சரியப்படுத்தினார். இந்த படம் உங்களை தொந்தரவு பண்ணும். யோசிக்க வைக்கும். எப்போதும் போல் நியாயமான தீர்ப்பை வழங்குங்கள் என்று பேசினார்.