திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (09:25 IST)

இயக்குனருக்கு லேப்டாப், இசையமைப்பாளருக்கு ஐபேட்: சூர்யாவின் தாராள மனசு

உறியடி இயக்குனர் விஜயகுமார் இயக்கி நடித்த 'உறியடி 2' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இன்று காலை ஐந்து மணி காட்சி பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனத்தை அளித்து வருகின்றது
 
இந்த நிலையில் இந்த படத்தை தயாரித்ததற்கு ஒரு தயாரிப்பாளராக பெருமை அடைகிறேன் என்று நடிகர் சூர்யா நேற்று செய்தியாளர்க்ளிடம் தெரிவித்தார். மேலும் படத்தை பார்த்து முழு திருப்தி அடைந்த சூர்யா, 'இயக்குனர் விஜயகுமார் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவும், குறிப்பிட்ட பட்ஜெட்டை விட குறைவாகவும் படத்தை முடித்து கொடுத்துள்ளது ஒரு தயாரிப்பாளராக தனக்கு மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார். 
 
இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் விஜயகுமாருக்கு தயாரிப்பாளர் சூர்யா, ஒரு மேக்புக் புரோ லேப்டாப் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் பணிபுரிந்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மற்றும் ஒளிப்பதிவாளர் பிரவீன்குமார் ஆகிய இருவருக்கும் ஐபேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். சூர்யாவின் தாராள மனதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.