திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2019 (09:01 IST)

ரஜினிக்கு வில்லன் எஸ் ஜே சூர்யாவா ? – ரஜினி 166 அப்டேட் !

ரஜினி நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு வில்லனாக இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினி நடிப்பில் உருவான பேட்ட படத்திற்கு அடுத்து ரஜினி ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் கீர்த்தி சுரேஷ் மற்றும் நிவேதா தாமஸ் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர்.

இப்படத்தினை லைகா நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. பேட்ட படத்தில் பாடல்கள் வெற்றி பெற்றதை அடுத்து அனிருத் மீண்டும் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இன்னும் இரண்டு நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்க இருக்கிறது. அரசியல் காரணங்களுக்காக ரஜினிதான் படப்பிடிப்பை மும்பைக்கு மாற்ற சொன்ந்தாக செய்திகள் வெளியாகின. இதனால் தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து இப்போது இந்த படத்தினை பற்றி முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க எஸ் ஜே சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. எஸ் ஜே சூர்யா ஏற்கனவே ஸ்பைடர் மற்றும் மெர்சல் ஆகியப் படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.