திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 1 ஏப்ரல் 2019 (08:23 IST)

அமிதாப் நடிக்கும் முதல் தமிழ்ப்படத்தின் ஸ்டில்கள்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனை தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் மறுப்பு தெரிவித்த அமிதாப், தற்போது தமிழ்வாணன் என்பவர் இயக்கும் 'உயர்ந்த மனிதன்' என்ற தமிழ்ப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். இந்த படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கின்றார்.
 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இதனை உறுதி செய்யும் வகையில் இந்த படத்தில் நடிக்கும் அமிதாப்பின் ஸ்டில்களை எஸ்.ஜே.சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை, சிகப்புத்துண்டு விபூதி, குங்குமம் என கிட்டத்தட்ட ஒரு சாமியார் போன்றே அமிதாப் காட்சி அளிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது