புகார் கொடுத்த மனைவியை பாட்டு பாடி மயக்கிய கணவர்
சண்டை காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளித்த மனைவியை, கணவன் பாட்டு பாடி சமாதானம் செய்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தை சேர்ந்த இளம் தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களிடையே வாக்குவாதம் முற்றி அது மோதலாக மாறியுள்ளது. இதனால் அந்த பெண் தன் கணவன் மீது அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரை அடுத்து அந்த தம்பதியினரை காவல் ஆய்வாளர் விசாரணைக்கு அழைந்திருந்தார். விசாரணைக்கு தம்பதிகள் தனித்தனியே ஆஜராயினர். அப்போது கணவர் அவரது மனைவிக்கு பிடித்தமான பாடலை பாட, அந்த பெண் அவரது கணவர் தோளில் சாய்ந்துக்கொண்டார்.
இதையடுத்து இவருடையே சண்டை காணாமல் போனது. காவல்துறையினர் இருவருக்கும் அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.