திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 8 மே 2021 (08:46 IST)

இயற்கை 2 உருவாக இருந்தது… நடிகர் ஷாம் ஆதங்கம்!

இயக்குனர் எஸ் பி ஜனநாதன் தனது முதல் படமான இயற்கையின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருந்ததாக ஷாம் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் எஸ் பி ஜனநாதன் முதல் முதலாக இயக்கிய திரைப்படம் இயற்கை. ரஷ்ய எழுத்தாளர் தஸ்தாவெஸ்கியின் வெண்ணிற இரவுகள் எனும் நாவலை மையமாக வைத்து கடல்புறத்தில் நடப்பது போல அதன் கதையை ஜனநாதன் உருவாக்கி இருந்தார். அதன் வித்தியாசமான படமாக்கலுக்காக அந்த படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.

அதையடுத்து அவர் ஈ, பேராண்மை, புறம்போக்கு எனும் பொதுவுடைமை மற்றும் லாபம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். இதில் லாபம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் லாபம் படத்துக்கு பிறகு தன்னுடைய முதல் படமான இயற்கை படத்தின் பார்ட் 2 வை எடுக்க இருந்தாராம். அதற்காக கதை விவாதமெல்லாம் நடந்ததாம். கதைக்களம் நார்வேயில் நடப்பது போல உருவாக்கப்பட்டிருந்ததாக நடிகர் ஷாம் தெரிவித்துள்ளார்.