ஜெயிலர் 2 படத்தில் சிவராஜ் குமார் நடிக்கிறாரா?... இல்லையா?
தமிழ் சினிமாவில் வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார் இயக்குனர் நெல்சன். ஆனால் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் அவர் கம்பேக் கொடுத்தார்.
அந்த படம் வெற்றியடைய அடுத்து சிவகார்த்தியோடு டாக்டர் மற்றும் விஜய்யோடு பீஸ்ட் மற்றும் ரஜினியோடு ஜெயிலர் என அவர் கிராஃப் எகிறிக்கொண்டே செல்கிறது. இப்போது ஜெயிலர் 2 பட வேலைகளில் இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது.
ஜெயிலர் முதல் பாகத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்திருந்தார். அது படத்தின் பிஸ்னஸுக்குப் பெரிய அளவில் உதவியது. அதனால் இரண்டாம் பாகத்திலும் சிவராஜ் குமார் இருப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் புற்றுநோய் சிகிச்சையில் தற்போது உள்ளார். ஆனால் தற்போது சிவராஜ் குமார் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க 15 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.