திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 8 மே 2021 (08:37 IST)

கொரோனா அச்சத்தால் ஆசிரியர் தற்கொலை… வேலூரி நடந்த சோகம்!

கொரோனா சிகிச்சையில் இருந்த உடல்கல்வி ஆசிரியர் மருத்துவமனையில் இருந்து தப்பி சென்ற நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பட்டியூர் பகுதியைச் சேர்ந்த உடல்கல்வி ஆசிரியர் ஏழுமலை. இவர் மேல்மாயில் அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த மே 3 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது தெரிந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே அவர் மிகுந்த பதற்றத்துடன் இருந்துள்ளார்.

வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். ஆனால் மருத்துவர்கள் அதற்கு மறுப்புக் கூறியுள்ளனர். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து தப்பித்துச் சென்று மாயமாகியுள்ளார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் போலிஸாருக்கு தகவல் கொடுக்க அ அவர்கள் ஏழுமலையை தேட ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் சிறுகரும்பூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் ஏழுமலையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதையடுத்து உடலைக் கைப்பற்றிய போலிஸார் உடல்கூறாய்வுக்காக அனுப்பியுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் ஏழுமலை தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.