செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 8 மே 2021 (08:09 IST)

வெய்யோனை இன்னும் ஆழப்பற்றி எழுவேன்- கொரோனா சிகிச்சையில் இருக்கும் வசந்தபாலன் பதிவு!

கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருக்கும் இயக்குனர் வசந்தபாலன் நம்பிக்கை அளிக்கும் விதமாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் வசந்தபாலனின் முகநூல் பதிவு :-

எனக்கு பெருந்தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டு உலகம் முழுக்க உள்ள நண்பர்கள் தங்கள் பேரன்பை என்மீது இடையறாது பொழிந்தவண்ணம் இருந்தார்கள். அன்பின் பெருமழையில் நனைந்து ஒரு மீனாய் கருணையின் நதியில் நீந்திச்சென்ற வண்ணம் இருந்தேன் ஆனாலும் ஆழ்மனதில் ஏதோ ஒரு துக்கம் அடைத்தவண்ணம் இருந்தது.

பிரிய நண்பனின் குறுஞ்செய்திக்கு பதிலளிக்கையில் காலங்காலமாக மனதிற்குள் உறைந்து கிடந்த கண்ணீர்க்கடல் உடைந்து சிறியதாக கண்ணீர் கசியத்துவங்கியது. எத்தனை பேரன்பைக் கண்ட பிறகு எனக்குள்ளிருந்து வெளியேறிய  சிறு கண்ணீர்த்துளி அத்தனை ஆனந்தம் தருவதாக இருந்தது.
இந்த இரவின் ஆழ்ந்த உறக்கத்திற்கான மொத்த யாமத்தையும் குடித்தது போல இருந்தது.  பிறந்த குழந்தைப் போன்று சிரித்தபடி உறங்குகிறேன். நாளை எழும் வெய்யோனை இன்னும் ஆழப்பற்றி எழுவேன்.