1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 8 மே 2021 (08:30 IST)

மாயவன் ரீ லோடட்… போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர்!

மாயவன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பை தயாரிப்பாளர் சி வி குமார் வெளியிட்டுள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் சி.வி.குமார் முதல்முதலாக இயக்கிய 'மாயவன்' திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்துக்கு இயக்குனர் நலன் குமாரசாமி திரைக்கதை அமைத்து இருந்தார். ஆனால் அந்த படம் பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முனைப்பில் இருக்கிறார் தயாரிப்பாளர் சி வி குமார்.

நடிகர் சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் மாயவன் ரிலோடட் என்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சி வி குமார் இப்போது கொற்றவை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.