திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (10:27 IST)

சூதாட்டம் நடத்தி கைதான சர்ச்சை –நடிகர் ஷாம் மறுப்பு!

தான் எந்த சூதாட்ட விடுதியும் நடத்தவில்லை என நடிகர் ஷாம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

12பி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அதன் பின்னர் பல திரைப் படங்களில் ஹீரோவாகவும் முக்கிய கேரக்டர்களிலும் நடித்தவர் நடிகர் ஷாம். ஆனாலும் இவரால் தமிழில் முன்னணி நடிகராக வரமுடியவில்லை. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நடிகர் ஷாம் தனது வீட்டில் சூதாட்ட கிளப் நடத்தி வருவதாகவும் அதில் சினிமா நடிகர்கள் உள்பட பல தொழிலதிபர்கள் கலந்து கொண்டு இருப்பதாகவும் செய்திகள் கசிந்தன.

அதையடுத்து கடந்தவாரம் போலீஸார் நடத்திய விசாரணையில் ஷாம் உள்பட 14 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாடியதாகவும் தெரியவந்தது இதனை அடுத்து ஷாம் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர். தற்போது கைது செய்யப்பட்ட அனைவரும் சொந்த ஜாமீனில் விடுதலையாகினர்.

இந்நிலையில் இதுகுறித்து மறுப்பு தெரிவித்துள்ள ஷாம் ‘நான் எந்த சூதாட்டத்தையும் நடத்தவில்லை. நாங்கள் நண்பர்கள் அனைவரும் சந்தித்து கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை விளையாடுவோம். ஆனால் இப்போது லாக்டவுன் காரணமாக அவ்வப்போது சந்தித்து போக்கர் போன்ற விளையாட்டுகளை விளையாண்டோம். அதில் யார் தோற்றார் வென்றார் என்பதை ட்ராக் செய்வதற்காக போக்கர் காயின்களைப் பயன்படுத்தினோம். நாங்கள் என்றுமே பணம் வைத்து விளையாடியதில்லை. சில நேரங்களில் தோற்றவர் அனைவருக்குமான பில்லை கட்டுவார். அவ்வளவுதான் ‘ எனக் கூறியுள்ளார்.