விராட் கோலி, தமன்னாவை கைது செய்ய வேண்டும்! – உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

MPL
Prasanth Karthick| Last Updated: வெள்ளி, 31 ஜூலை 2020 (12:49 IST)
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை ஆதரித்து விளம்பரம் செய்ததற்காக நடிகை தமன்னா மற்றும் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கைது செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சமீப காலமாக ஆன்லைன் மோசடி விளையாட்டுகளால் மக்கல் பலர் ஏமாற்றப்படுவதும், பலர் விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் சென்னையை சேர்ந்த கல்லூரி இளைஞர் ஒருவர் இதுபோன்ற ஆன்லைன் விளையாட்டு ஒன்றில் பணம் முழுவதையும் இழந்ததாலும் விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ள வழக்கறிஞர் சூர்யப்ரகாஷ் சூதாட்ட விளையாட்டுகளை ஊக்குவிக்கும் விதமாக அந்த விளம்பரங்களில் நடித்த இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதை அவசர வழக்காக ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிமன்றம் இந்த மனுவின் மீதான விசாரணையை ஆகஸ்டு 4ம் தேதி நடத்துவதாக தெரிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :