1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (14:11 IST)

நடிகர்-இயக்குனர் ஆர்.என்.ஆர். மனோகர் காலமானார்!

நடிகர்-இயக்குனர் ஆர்.என்.ஆர். மனோகர் காலமானார்!
தமிழ் திரையுலகில் நடிகர் இயக்குனர் ஆர்.என்.ஆர். மனோகர் இன்று திடீரென காலமானதை அடுத்து திரையுலகினர் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
அஜித் நடித்த வீரம், விசுவாசம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவரும் வேலூர் மாவட்டம், மாசிலாமணி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவருமான ஆர்.என்.ஆர். மனோகர் ஒரு சில பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைந்த நடிகர் ஆர்.என்.ஆர். மனோகர் அவர்கள் திமுக எம்பி ஆர்.என்.ஆர். இளங்கோ அவர்களின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது