புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 17 நவம்பர் 2021 (07:36 IST)

ஈரோட்டில் இன்று 4000 கடைகள் திடீர் அடைப்பு: என்ன காரணம்?

ஈரோட்டில் இன்று 4000 கடைகள் திடீர் அடைப்பு: என்ன காரணம்?
ஈரோட்டில் இன்று 4000 கடைகள் அடைக்கப்படும் என வணிகர் சங்கத்தினர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில மாதங்களாக நூல் விலை அதிகமாக உயர்ந்து வருவதை அடுத்து ஜவுளி நிறுவனங்கள் நூல் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது
 
ஆனால் அரசு இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் ஜவுளி நிறுவனங்கள் இன்றும் நாளையும் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது
 
இதன் காரணமாக ஈரோட்டில் இன்றும் நாளையும் 4000க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்படும் கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் கலைச்செல்வன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால் ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது