செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (09:01 IST)

நடிகர் சந்தானத்திற்கு எதிராக #சாதிவெறி_சந்தானம்: பின்னணி என்ன?

நடிகர் சந்தானத்திற்கு எதிராக #சாதிவெறி_சந்தானம் என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது. 

 
சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். ஓடிடியில் வெளியான இந்த படம் இருளர் பழங்குடி மக்களின் வாழ்வில் நடக்கும் துயரங்களை பதிவு செய்துள்ளதாக பரவலாக நல்ல பாராட்டையும், விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
 
இந்நிலையில், சந்தானத்தின் சபாபதி படம் வெளியாகவுள்ளது. இதன் ப்ரோமோஷனில் ஈடுபட்டுள்ள சந்தானத்திடன் ஜெய்பீம் பட விவகாரம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சந்தானம், எனக்கு  #westandwithsuriya ஹேஷ்டேக் பற்றி தெரியாது. திரைப்படங்களில் உயர்வு தாழ்வு இருக்க கூடாது. 
திரைப்படங்களில் ஒருவரை உயர்த்தி காட்டுவதற்காக மற்றவர்களை தாழ்த்துவது சரியல்ல. எந்த ஒரு கருத்தையும் தூக்கிப்பேசலாம், எவரையும் தாக்கிப் பேசக் கூடாது என தெரிவித்தார். சந்தானத்தின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. சந்தானம் இந்த பிரச்சனையில் சம்பந்தப்பட்டுள்ள குறிப்பிட்ட சமூகத்தை ஆதரித்து இவ்வாறு பேசியுள்ளதாக கண்டனங்கள் வலுக்கின்றன. 
 
அதோடு சமூக வலைத்தளமான டிவிட்டரில் #WeStandWithSuriya என்ற ஹேஷ்டேகோடு  #சாதிவெறி_சந்தானம் என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.