திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 12 டிசம்பர் 2022 (16:11 IST)

முதல் குழந்தையை எதிர்பார்த்து நடிகர் ராம்சரண்- உபசனா தம்பதி- சூப்பர் ஸ்டார் டுவீட்

Ram Charan -Upasana Kamineni
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண் மற்றும் அவரது மனைவி  உபசனா இருவரும் முதல் குழந்தையை எதிபார்த்துள்ளதாக  சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண். இவர், மகதீரா, ஆச்சார்யா  வினாய விதீயா, ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட சூப்பர் படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு  ராம்சரணுக்கும் உபசனாவுக்கும் திருமணம் நடந்தது.

இந்த நிலையில், ராம்சரண்- உபசனா தம்பதியர்  இருவரும் அவர்களின் முதல் வாரிசை எதிர்பார்த்துள்ளதாக ராம்சரணின் தந்தையும், தெலுங்கு சூப்பர்ஸ்டாருமான சிரஞ்சீவி தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

எனவே, ராம்சரண் – உபாசனா தம்பதியர்க்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Edited By Sinoj