செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 26 அக்டோபர் 2022 (14:43 IST)

சங்கராந்திக்கு வெளியாகும் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் அடுத்த படம்!

சிரஞ்சீவி நடித்துள்ள வால்டேர் வீரய்யா என்ற திரைப்படம் சங்கராந்திக்கு வெளியாக உள்ளது.

மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இதையடுத்து இந்த படம் இப்ப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. லூசிபர் என்ற பெயர் காட்பாதர் என மாற்றப்பட்டுள்ளது. மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார். இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதையடுத்து சிரஞ்சீவி மற்றும் ரவிதேஜா நடிப்பில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படமான வால்டேர் வீரய்யா படம் சங்கராந்திக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆதிபுருஷ், வீரசிம்மா ரெட்டி ஆகிய படங்களோடு விஜய்யின் வாரிசு திரைப்படமும் சங்கராந்திக்கு வெளியாகும் நிலையில் நான்காவது படமாக வால்டேர் வீரய்யாவும் இணைந்துள்ளது.