வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 7 டிசம்பர் 2022 (22:36 IST)

''எனக்குப் பிடித்ததுபோல் தான் வாழ்வேன்''- ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஸ்ருதி ஹாசன். இவர், தற்போது, தெலுங்கு, இந்தி சினிமாவிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தற்போது, வீர சிம்ஹா ரெட்டி என்ற தெலுங்கு படத்தில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்து வருகிறார். அதேசமயம்,  சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன்  வால்டர்வீரய்யா என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இந்த இரு படங்களும் வரும் பொங்கல் விடுமுறை தினத்தில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், எனக்குப் பிடித்ததுபோல் தான் வாழ்வேன் என்று ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:  சினிமாவில் நான் பலவித கதாப்பாத்திரங்களில் நடித்தாலும், பல வகை உடைகள் உடுத்தினாலும், நிஜ வாழ்க்கையில் எனக்குப் பிடித்துபோல் நான் இருப்பேன் என்றும், மற்றவர்களாக நம்மை மாற்றிக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Edited By Sinoj