ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 18 நவம்பர் 2022 (09:48 IST)

சிரஞ்சீவியின் லேட்டஸ்ட் ஹிட் காட்பாதர்… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இதையடுத்து இந்த படம் இப்ப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. லூசிபர் என்ற பெயர் காட்பாதர் என மாற்றப்பட்டுள்ளது. மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார்.

இந்த படத்தை எப்படியாவது ஹிட் ஆக்கிவிட வேண்டும் என்பதற்காக பாலிவுட் நடிகர் சல்மான் கானை ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்க வைத்துள்ளனர். கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி வெளியான இந்த படத்தை ஆந்திரா மற்றும் தெலங்கானா தவிர பிற மாநிலங்களில் பெரியளவில் பிஸ்னஸ் செய்யவில்லை.

சிரஞ்சீவியின் சமீபத்தைய படங்கள் மோசமான தோல்வியைப் பெற்ற நிலையில் இந்த படம் நல்ல வசூலைக் குவித்தது. இந்நிலையில் இந்த படம் வரும் நவம்பர் 19 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.