வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (18:42 IST)

எங்கள் அண்ணன் ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார்.. மற்றவங்க எல்லாம்.. பிரபு விளக்கம்..!

சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆளாளுக்கு ஆசைப்பட்டு வரும் நிலையில் எங்கள் அண்ணன் ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர் ஸ்டார் என நடிகர் பிரபு தெரிவித்துள்ளார். 
 
சூப்பர் ஸ்டார் பட்டத்தை ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக வைத்திருக்கும் நிலையில் அந்த பட்டத்தை விஜய் கைப்பற்ற முயற்சி செய்வதாக கூறப்படுகிறது. இதனால் சமூக வலைதளங்களில் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது 
 
இந்த நிலையில் நடிகர் பிரபு சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது எங்கள் அண்ணன் ரஜினி மட்டும் தான் சூப்பர் ஸ்டார் மற்றவங்க எல்லாரும் சூப்பர் ஆக்டர்ஸ் என்று தெரிவித்தார். 
 
நான் இதே இடத்தில் இருக்க முடியாது, யாராவது வரணும்னு தான் அவரும் சொல்றார், அவரே வழி விடுகிறார்,  தம்பி விஜய் அஜித் எல்லாரும் வரட்டுமே என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.
 
Edited by Mahendran