வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (13:16 IST)

பகை மறந்து பிரபல தயாரிப்பாளருக்கு உதவிய நடிகர் விக்ரம்!

Vikram
கடந்த 2003 ஆம் ஆண்டு பாலாவின் இயக்கத்தில், நடிகர் விக்ரம் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான படம் பிதாமகன். இப்படத்தில் இவர்களுடன் இணைந்து லைலா, சங்கீதா, கருணாஸ், மகாதேவன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இப்படத்தை தயாரித்தவர் வி.ஏ.துரை. இவர், சத்யராஜின் என்னம்மா கண்ணு என்ற படத்தையும் தயாரித்திருந்தார்.

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவருக்கு சினிமா பிரபலங்கள் உதவி செய்தனர். சமீபத்தில் அவரது ஒரு காலை எடுக்க வேண்டிய நிலையில் அதை எடுத்துவிட்டார்கள் எனவும் அவருக்கு செயலற்கை கால் பொருத்த பணம் இல்லாம தவிப்பதாக தகவல் வெளியானது.
v a dhurai

இதைக் கேள்விபட்ட  நடிகர் விக்ரம், வி..ஏ.துரைக்கு செயற்கைக் கால் பொருத்துவதற்கான நிதியுதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், பிதாமகன் படத்தில் நடித்த விக்ரமுக்கு அப்போது, வி.ஏ.துரை ரூ.25 லட்சம் சம்பள பாக்கி வைத்ததாக சர்ச்சை எழுந்தது. இதை மறந்து விக்ரம் தன் படத் தயாரிப்பாளருக்கு உதவியுள்ளார்.