1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (13:56 IST)

ரஜினி முத்தவர்… விஜய் இளையவர் – ஜெயிலர் ஆடியோ ரிலீஸ் குட்டிக்கதை குறித்து இயக்குனர் மிஷ்கின்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு  முன்னர் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் பருந்து மற்றும் காக்கா கதையை கூறியதை அடுத்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக அவர் விஜய்யை குறிப்பிட்டுதான் அந்த கதையை சொன்னதாக சமூகவலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்றன.

ரஜினி அந்த மேடையில் “பறவைகளில் காக்கா எப்போதும் பலருக்கு தொல்லை கொடுக்கும், ஆனால் பருந்து யாருக்கும் தொல்லை கொடுக்காது. கழுகை கூட காக்கா டிஸ்டர்ப் செய்யும், ஆனால் கழுகு எதுவுமே செய்யாது. அது அடுத்த கட்டத்திற்கு சென்று விடும். காகம் அதற்கு போட்டியாக உயர பறக்க முயற்சிக்கும், ஆனால் முடியாது.  நான் காக்கா, கழுகு என்று சொன்னவுடன் இவரைத்தான் சொல்கிறேன் என்று சமூகவலைகளில் சொல்வார்கள். குறைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை, இது ரெண்டும் இல்லாத ஊரும் இல்லை. நாம் நம் வேலையை பார்த்து விட்டு போயிட்டே இருக்கணும்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்போது ரஜினியின் பேச்சு குறித்து இயக்குனர் மிஷ்கின் கருத்து கூறியுள்ளார். அதில் ”ரஜினி பேச்சை நான் கேட்கவில்லை. ஆனால் அவர் கண்டிப்பாக யாரையும் குறிப்பிட்டு சொல்லியிருக்க மாட்டார். ரசிகர்கள் அவரின் பேச்சை வைத்து சண்டை போட்டுக்கொள்ள கூடாது. இது ஒரு குடும்பம் மாதிரி. ரஜினி மூத்தவர், விஜய் இளையவர். அப்படிதான் நாம் இதை பார்க்கவேண்டுமே ஒழிய, வெளியில் இருப்பவர்கள் இதை வைத்து சண்டை போட்டுக்கொள்ளக் கூடாது” எனக் கூறியுள்ளார்.