புதன், 5 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 5 பிப்ரவரி 2025 (10:39 IST)

பூமியை அழிக்க வந்துவிட்டார் கேலக்டஸ்! ஒரு புது சூப்பர்ஹீரோ டீம் - Fantastic Four அதிரடி தமிழ் டீசர்!

Fantastic Four

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அதிரடியான The Fantastic Four First Steps படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் சூப்பர்ஹீரோ ரசிகர்களிடையே ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

 

உலகம் முழுவதும் சூப்பர்ஹீரோ படங்களுக்கு கும்பல் கும்பலாக பல ரசிகர்கள் உள்ளனர். முக்கியமாக மார்வெல் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 30க்கும் மேற்பட்ட படங்கள், வெப் சிரிஸ்கள் வெளியாகி கலக்கி வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம்தான் he Fantastic Four First Steps. 
 

இந்த ஃபெண்டாஸ்டிக் ஃபோர் திரைப்படம் 90ஸ் கிட்ஸ் காலத்திலேயே ஃபாக்ஸ் ஸ்டார் தயாரிப்பில் ஒரு படம் வெளியாகியிருந்தாலும் கூட தற்போது மார்வெல் ஸ்டுடியோஸ் அந்த உரிமைத்தை பெற்றுள்ள நிலையில் அந்த கதையை ரீபூட் செய்து, அவர்களது சினிமாட்டிக் யுனிவர்ஸில் இணைக்கின்றனர்.

 

இந்த படத்தின் அனைத்து மொழி டீசர்களும் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. முக்கியமாக இந்த படத்தில் கேலக்டஸ்தான் வில்லன் என்பதை டீசரிலேயே காட்டிவிட்டதால் ரசிகர்கள் திக்குமுக்காடி போய் விட்டனராம். முன்னதாக மார்வெல் யுனிவெர்ஸில் வந்த பெரும் வஸ்தாதான தானோசே இந்த கேலக்டஸ் முன்னால் சின்ன பொடியனாம்.

 

இப்படியான பெரிய வில்லனை கொண்டு வந்துள்ளதால் அடுத்த சில ஆண்டுகளில் வரவுள்ள அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே உள்ளிட்ட படத்தின் கதைகளோடு இப்போதே இதை முடிச்சு போட்டு பேசத் தொடங்கியுள்ளனர். அவெஞ்சர்ஸ் எண்ட் கேமிற்கு பிறகு சுணக்கமாக திரியும் மார்வெல் யுனிவர்ஸ் ஃபெண்டாஸ்டிக் ஃபோரிலாவது விழித்தெழுகிறதா பார்ப்போம்.

 

Edit by Prasanth.K