அஜித் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம்: மன்னிப்பு கேட்ட வலைப்பேச்சு

Last Modified புதன், 7 ஆகஸ்ட் 2019 (08:06 IST)
அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படம் நேற்று சென்னையில் பத்திரிகையாளர் காட்சி திரையிடப்பட்ட நிலையில் இந்த படத்திற்கு அதிக பட்சமாக பாசிட்டிவ் விமர்சங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. இதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு எகிற வைத்த நிலையில் வலைப்பேச்சு என்ற யூடியூப் சேனல் மட்டும் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் தந்தது.
அதாவது வலைப்பேச்சு இந்த படத்தின் விமர்சனத்தில் வட இந்திய பெண்கள் மற்றும் தென்னிந்திய பெண்களின் நிலை குறித்து கூறிய ஒரு சர்ச்சைக்குரிய கருத்தால் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெண் பத்திரிகையாளர்கள்,
பெண்கள் அமைப்புகள், டுவிட்டர் பயனாளிகள், அஜித் ரசிகர்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து வலைப்பேச்சு குழுவினர் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வலைப்பேச்சு குழுவினர் கூறியதாவது: வலைப்பேச்சு சேனலில் வெளியிடப்பட்ட நேர்கொண்ட பார்வை விமர்சனத்தில் பெண்கள் குறித்து நாங்கள் பேசிய சில கருத்துக்கள் பலரது மனதை புண்படுத்தி இருப்பதை அறிந்து வருகிறோம். அவை கதை தொடர்பாக கூறப்பட்ட கருத்துக்கள் தானே தவிர பெண்களை தவறாக குறிப்பிட்டு பேசப்பட்ட வார்த்தைகள் அல்ல என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். எனினும் தார்மீக ரீதியாக மனம் திறந்த மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறோம். தற்போது அந்த வீடியோவை நீக்கி இருக்கிறோம் என்று விளக்கம் அளித்துள்ளது

இருப்பினும் இந்த சேனலுக்கு அதிக அளவில் எதிர்ப்புகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விமர்சனம் என்ற பெயரில் தங்கள் இஷ்டத்திற்கு விமர்சனம் செய்பவர்களுக்கும் தங்கள் சொந்த கருத்தை திணிப்பவர்களுக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அஜித் குறித்து அவ்வப்போது நெகட்டிவ் கருத்துக்களை இந்த சேனல் கூறி வருவதாகவும் அஜித் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சேனலில் உள்ள மூவரும் விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :