திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 10 டிசம்பர் 2020 (15:51 IST)

’’எக்கச்சக்க பாட்டில்’’ நடிகர் பார்த்திபன் டுவீட்…. புகைப்படம் வைரல்

தமிழ் சினிமாவில் முப்பதாண்டுகளுக்கு மேலான சிறந்த இயக்குநராகவும் , நடிகரானகவும் குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் நடிகர் பார்த்திபன்.

இவர் படத்தின் சூட்டிங்கிறாகப் புதுச்சேரி சென்றிருக்கிறார். அப்போது, அவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகத் தெரிகிறது.

இதில், அவர் மதுகுடிப்பதுபோன்ற புகைப்படத்தைத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், புதுச்சேரி கச்சேரி எக்கச்செக்க (shooting) ஸ்’பாட்டில் இருக்கேன்! என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும்  நேற்று தன் டுவிட்டர் பக்கதில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார். அதில், நம்பிக்கை எதன்மீதும் வைக்கலாம்/ எடுக்கலாம்.ஆனால் நம்பிக்கை என்பதன் மீது நம்பி கை வைத்துவிட்டால்,எடுக்க இயலாது.பிய்த்து எடுத்தாலும்
ரேகைகள் இருக்கும்-கை இருக்காது
நிழல்கள் இருக்கும்-உருவம் வசமிழந்து வசமாய் மாட்டிக்கொள்வோம்
நம்பிக்கையை உன்மீது வை,
நம்பிக்கையின் மீது உன்னை வைக்காதே!!!  எனத் தெரிவித்துள்ளார்.