சிவகார்த்திகேயன் சம்பளத்தை வைத்து தன் சம்பளத்தை முடிவு செய்யும் நடிகர்? ஏன் இந்த விபரீத விளையாட்டு!
தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளில் அறிமுகமாகி உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தை பெற்றவர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான்.
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி என்பது இமாலய அளவிலானது. அவருக்கு முன் வந்த நடிகரகள் எல்லாம் இன்னும் சில கோடிகளையே சம்பளமாக வாங்க முடியாத நிலையில் சிவகார்த்திகேயனின் சம்பளமோ 20 கோடிக்கு மேல் என சொல்லப்படுகிறது.
இத்தனைக்கும் சமீபத்தில் அவர் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்தன. ஆனாலும் அவர் சம்பளம் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டேதான் செல்கிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயனின் சம்பளத்தை வைத்து அதை விட சில கோடிகள் எனக்கு அதிகமாக சம்பளம் வேண்டும் என அடம்பிடிக்கிறாராம்.
அவர் சிவகார்த்திகேயனை விட அதிகமாக சம்பளம் வாங்க எல்லாத் தகுதியும் உடையவர்தான் என்றாலும் ஏன் தன்னை மற்றவரோடு ஒப்பிட்டுக் கொள்ளவேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.