செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (10:15 IST)

சம்பள விஷயத்தில் கார்த்தி இவ்வளவு நல்லவரா? வியக்க வைக்கும் தகவல்!

நடிகர் கார்த்தி தனது சம்பளத்தை 12 கோடிக்கு மேல் அதிகமாக வாங்குவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான கார்த்தி, இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவர். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் அவர் படங்கள் நன்றாக ஓடி அங்கும் மார்க்கெட் உள்ள நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆனாலும் சம்பள விஷயத்தில் கார்த்தி ஒரு நற்பண்பு அனைவரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது. எத்தனையோ ஹிட்களைக் கொடுத்திருந்தாலும், கார்த்தி தனது அதிகபட்ச சம்பளமாக இதுவரை 12 கோடி ரூபாய்தான் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதை மற்ற ஹீரோக்களும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.