செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (08:00 IST)

பிக்பாஸ் நிகழ்ச்சி… கமலை விட பல மடங்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகர்!

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் நடந்து வரும் நிலையில் அதில் அதிக சம்பளம் பெறும் நடிகராக சல்மான் கான் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழில் பிக்பாஸ் சீசன் 4 விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. அதற்காக வேலைகள் இப்போது ஜரூராக நடந்து வருகின்றன. தென்னிந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஒரு நடிகர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தாலும், தமிழில் கமல் மட்டுமே நான்கு ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார். அந்த அளவுக்கு சிறப்பாக நடத்திவரும் அவர்தான் தென்னிந்தியாவில் பிக்பாஸுக்காக அதிக சம்பளம் பெற்ற நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவரை விட பல மடங்கு அதிக சம்பளம் பெற்று வருகிறாராம் சல்மான் கான், இப்போது 14 ஆவது சீசன் இந்தியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதை தொகுத்து வழங்க சல்மானுக்கு 200 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் கமலுக்கோ இன்னும் 30 கோடியையே தாண்டவில்லை என சொல்லப்படுகிறது.