1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (16:41 IST)

அனுமதி கொடுத்த முதல் நாளே படப்பிடிப்பு: களை கட்டும் தமிழ் சினிமா

அனுமதி கொடுத்த முதல் நாளே படப்பிடிப்பு
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக திரைப்பட படப்பிடிப்பு நடைபெறாத நிலையில் சமீபத்தில் செப்டம்பர் 1 முதல் திரைப்பட படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு அனுமதித்தது 
 
75 நபர்களுக்கு மிகாமல் படப்பிடிப்பை நடத்த வேண்டும் எனவும் படக்குழுவினர் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் தமிழக அரசு அறிவித்தது
 
அதன்படி இன்று முதல் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளதால் தமிழ் சினிமா களைகட்ட தொடங்கியுள்ளது
 
இந்த நிலையில் திண்டுக்கல்லில் ’சூனா பானா’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இந்த படத்தில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டு அரசு விதித்த நிபந்தனைகளை கடைப்பிடித்து படப்பிடிப்பை நடத்தி வந்தனர் இந்த படத்தின் படப்பிடிப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது
 
கடந்த 5 மாதங்களாக வேலை இல்லாமல் வருமானம் இன்றி இருந்த திரையுலகினர் இன்று முதல் மீண்டும் தங்களுடைய வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் வருமானத்தை பெற்று உள்ளனர் என்பது திரையுலகினருக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும்