தொடர்புடைய செய்திகள்
- பிக்பாஸ் நிகழ்ச்சி… கமலை விட பல மடங்கு அதிக சம்பளம் வாங்கும் நடிகர்!
- சூரியும் சூர்யாவும் செய்துவரும் ஒரே வேளை – வெற்றிமாறன் என்ன செய்யப் போகிறார்!
- சம்பள விஷயத்தில் கார்த்தி இவ்வளவு நல்லவரா? வியக்க வைக்கும் தகவல்!
- தெலுங்கில் லேடி சூப்பர் ஸ்டாராக நினைக்கும் சமந்தா… அதுக்கு ஹிட் கொடுக்கணுமே!
- சம்பளம் தராத முதலாளி; கொன்று வீசிய ஊழியர்! – டெல்லியில் பரபரப்பு!
ஒரே ஒரு வெற்றிப்படம்: 4 மடங்கு சம்பளத்தை உயர்த்திய தமிழ் இயக்குனர்
நடிகர் நடிகைகள் ஒரே ஒரு வெற்றிப்படம் கொடுத்து விட்டால் இரண்டு மடங்கு மூன்று மடங்கு சம்பளத்தை உயர்த்துவது தமிழ் திரையுலகில் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. நடிகர்கள் சம்பளத்தை உயர்த்தாவிட்டாலும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு உயர்த்தும் சோதனைகளும் நடந்து வருகிறது
இந்த நிலையில் ஒரு இயக்குனர் ஒரே ஒரு வெற்றிப்படத்தை கொடுத்துவிட்டு நான்கு மடங்கு சம்பளத்தை உயர்த்தி உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அசுரன். இந்த படத்திற்காக வெற்றிமாறன் வாங்கிய சம்பளம் ரூ 6 கோடி அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்துக்கு 25 கோடி சம்பளம் கேட்டிருக்கிறாராம்
ஒரே ஒரு வெற்றிப்படத்தை கொடுத்துவிட்டு நான்கு மடங்கு சம்பளத்தை உயர்த்தியுள்ள வெற்றிமாறனால் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா காலத்தில் நடிகர், நடிகைக்ள், மற்றும் இயக்குனர்கள் சம்பளத்தை குறைத்து தயாரிப்பாளருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற குரல் ஒருபக்க்ம் ஒலித்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் சம்பளம் 4 மடங்கு உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
