வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 12 மார்ச் 2023 (09:18 IST)

மூத்த இயக்குனர் ஷ்யாம் பெனகல் உடல்நலக்குறைவு… சிறுநீரகங்கள் செயலிழப்பு!

வங்காளத்தின் முக்கியமான இயக்குனர் ஷியாம் பெனகல். இந்தியாவின் சிறந்த 25 இயக்குனர்களின் பட்டியலை தயா‌ரித்தால் இவரும் இருப்பார். ஷியாம் பெனகலின் அடுத்தப் படத்தில் பிபாசா பாசு நடிக்கிறார். இவர் இயக்கிய 7 படங்கள் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளன. இவரின் பல படங்கள் பல காட்சிகள் பல மொழிகளில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

தற்போது 88 வயதாகும் ஷ்யாம் பெனகல், வங்காளதேசத்தின் முதல் பிரதமரான முஜிபுர் ரஹ்மானின் பயோபிக்கை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளதாகவும் வீட்டில் வைத்தே டயாலிசீஸ் நடத்துவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் திரை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.