வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 9 மார்ச் 2023 (09:31 IST)

“ஏய் இந்தாம்மா… மகளிர் தின வாழ்த்துகள்”- இணையத்தில் வைரல் ஆகும் நடிகர் மாரிமுத்துவின் வீடியோ!

தமிழில் இருக்கும் திறமையான குணச்சித்திர நடிகர்களில் மாரிமுத்துவும் ஒருவர். பரியேறும் பெருமாள் படத்தில் நடிகை கயல் ஆனந்தியின் தந்தையாக அவர் நடித்திருந்த கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இது தவிர, கொம்பன், பரியேறும் பெருமாள், கடைக்குட்டி சிங்கம் மற்றும் நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சிறந்த நடிகராக அறியப்பட்ட இவரின் மற்றொரு முகம் யாரும் அறியாதது. இவர் அடிப்படையில் ஒரு இயக்குனர் பிரசன்னா நடிப்பில் உருவான கண்ணும் கண்ணும் படம் மற்றும் விமல் பிரசன்னா நடிப்பில் உருவான புலிவால் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார். ஆனால் அந்த படங்கள் வெற்றி பெறாததால் நடிப்பில் முழு மூச்சாக இறங்கிவிட்டார்.

இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் இவர் நடித்து வரும் ஆதி குணசேகரன் என்ற ஆணாதிக்க வாதி கதாபாத்திரம் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. சீரியலுக்கு வெளியேயும் அவர் நேர்காணல்களில் சொல்லும் கருத்துகள் சம்மந்தமான ட்ரோல்களும் மீம்களும் பகிரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அவரைப் பற்றிய மீம்களைக் கலாய்க்கும் விதமாகவே அவர் இப்போது பெண்கள் தின் வாழ்த்துகள் சொல்லும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.