1500 படங்களுக்கு இசையமைச்சு சொல்றேன் வெற்றிமாறன் முக்கியமான இயக்குனர்- இளையராஜா பாராட்டு!
கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய விடுதலை படம் மார்ச் இறுதியில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். இந்நிலையில் ஷுட்டிங் முடிந்து தற்போது பின் தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. படத்தின் டப்பிங் சமீபத்தில் நடந்து முடிந்தன. படத்தின் பாடல்கள் மற்றும் இசை வெளியீடு நேற்றிரவு நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய இசைஞானி இளையராஜா இயக்குனர் வெற்றிமாறனை வெகுவாக பாராட்டியுள்ளார். அவரது பேச்சில் “கடலில் வரும் அலை எப்படி ஒவ்வொன்றும் வேறு வேறாக இருக்குமோ. அது போல வெற்றிமாறன் ஒவ்வொரு படத்துக்கும் ஒரு கதை எழுதுகிறார். 1500 படங்களுக்கு இசையமைச்சபிறகு சொல்கிறேன். வெற்றிமாறன் மிக முக்கியமான இயக்குனர். இந்த படத்தில் இதுவரை இல்லாத இசையை நீங்கள் எதிர்பார்க்கலாம்.” எனக் கூறியுள்ளார்.