வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2023 (08:13 IST)

புது கெட்டப்பில் இயக்குனர் தேசிங் பெரியசாமியோடு சிம்பு… வைரல் ஆகும் புகைப்படம்!

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு குறித்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தில் சிம்பு நாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமான இது சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கும் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் பரவி வருகிறது.

இந்த படத்தை மிகப் பிரம்மாண்டமாக உருவாக்க கமல் மற்றும் அவரின் ராஜ்கமல் பிலிம்ஸ் பங்குதாரரான மகேந்திரன் ஆகியோர் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் இந்த படம் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்படும் என தகவல்கள் பரவி வருகின்றன. இந்த படத்துக்காக சிம்புவும் தன்னுடைய சம்பளத்தைக் கணிசமாக குறைத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. STR 48 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் அறிவிப்பு ரசிகர்களைக் கவர்ந்த நிலையில் இப்போது இயக்குனர் தேசிங் பெரியசாமியோடு சிம்புவோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சிம்பு உடல் எடையைக் குறைத்து தாடியை எடுத்து ஸ்மார்ட் ஆக இருக்கும் இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.