அப்துல்கலாம் வாழ்க்கை படமாகிறது! கலாம் வேடத்தில் அனில் கபூர்
மறைந்த ஆந்திர முதல்வர்கள் என்.டி.ராமராவ், ராஜசேகர ரெட்டி மற்றும் பால்தாக்கரே ஆகியோரின் வாழ்க்கை படமாகி வருகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையையும் படமாக்கி வருகிறார்கள். இந்நிலையில் விஞ்ஞானி நம்பிநாராயணன் வாழ்க்கை சினிமா படமாகி வருகிறது. இதில் மாதவன் நடிக்கிறார். இந்த வரிசையில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் வாழ்க்கையும் சினிமா படமாகிறது. இதை தெலுங்கு பட அதிபர்கள் அனில் சுன்கரா, அபிஷேக் அகர்வால் ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் அப்துல்கலாம் வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அனில்கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.