திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 15 ஆகஸ்ட் 2018 (09:58 IST)

அஜித்தின் அறிவியல் குழுவுக்கு தமிழக அரசு விருது

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அஜித் தலைமையிலான தக் ஷா என்ற அறிவியல் குழு சென்னை அண்ணா பல்கலைகழகம் நடத்திய ஆளில்லா விமான கண்காட்சியில் பங்கு பெற்று முதல் பரிசினை வென்றது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் இந்த குழுவிற்கு தமிழக அரசின் அறிவியல் விருதான அப்துல்கலாம் விருது கிடைத்துள்ளது. இந்த அறிவிப்பை இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இது அஜித் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்திற்கே பெருமையாக பார்க்கப்படுகிறது.
 
அண்ணா பல்கலைக்கழகத்தின் வான்வெளி ஆராய்ச்சி மையமான தக் ஷா,  அஜித்தின் ஆலோசனையில் இன்னும் பல சாதனைகளை உருவாக்க வேண்டும் என்று சமூக வலைத்தள பயனாளிகள் பாராட்டி வருகின்றனர்.