கஜினி பாத்துட்டு நோலன் என்ன சொன்னார் தெரியுமா?
ஹிந்தி நடிகர் அனில்கபூர், இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்தும் அதில் நோலன் தன்னுடைய கஜினி திரைப்படம் காப்பியடிக்கப்படது குறித்தும் மூன்றாண்டுகளுக்கு முன் பேசிய வீடியோ ஒன்று இப்போது வைரல் ஆகிவருகிறது.
சர்கார் கதை திருட்டு தற்போது உச்சத்தைத் தொட்டு பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. திரை எழுத்தாளர்கள் சங்கமும் சர்கார் கதையும் செங்கோல் கதையும் ஒன்றுதான் எனக்கூறி சான்றளித்துள்ளது. இந்த கடிதத்தால், நீதிமன்றத்தில் நடைபெற்றும் வழக்கில் வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக தீர்ப்பு வருவதற்கான வாய்ப்பை அதிகமாகியுள்ளது.
இந்நிலையில் ஏ ஆர் முருகாதாஸ் இயக்கும் ஒவ்வொரு படத்திற்கும் இதே போன்று ஒருவர் கதை திருட்டு புகார் கூறிவரும் நிலையில் அவரின் பிளாக்பஸ்டர் ஹிட்டான கஜினி குறித்து ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோப்ஃபர் நோலன்(கஜினி, இவரின் மெமெண்ட்டோவில் இருந்து உருவப்பட்டது) என்ன கூறியிருக்கிறார் தெரியுமா?
இதுகுறித்து பாலிவுட் நடிகர் அனில்கபூர் 3 ஆண்டுகளுக்கு முன் தனது ஹாலிவுட் அனுபவங்கள் குறித்த அளித்த நேர்காணல் ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அதில் அனில்கபூர் ‘ஒருமுறை இயக்குனர் நோலனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரோடு பேசிக்கொண்டிருக்கும்போது என்னுடைய படங்களில் ஒன்று உங்கள் ஊரில் காப்பி அடிக்கப்பட்டுள்ளது என்றார். நான் ஆமாம் அந்தப் படத்தின் பெயர் கஜினி என்றேன். அந்த படம் இந்தியாவில் நல்ல வெற்றி பெற்று வசூல் சாதனை செய்தது என்றேன். அதைக் கேட்ட நோலன், அந்த இயக்குனர் தனக்கு கிரெடிட்ஸோ அல்லது பணமோ தரப்படவில்லை எனக் கூறி வருத்தப்பட்டார். இந்த சந்திப்பு குறித்து நான் அமீர் கானிடமும் கூறினார். அதைக்கேட்டு அவரும் வருத்தப்பட்டார்’ என்று கூறியுள்ளார்.