ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2024 (12:11 IST)

ஆகாஷ் முரளி நடிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கும் ‘நேசிப்பாயா’ டீசர் ரிலீஸ் அப்டேட்!

XB ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், பில்லா புகழ் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி(அதர்வாவின் தம்பி), அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் 'நேசிப்பாயா' படத்தின் டீசர் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

எப்போதும் விஷ்ணுவர்தனின் படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைப்பார். அதே போல இந்த படத்துக்கும் யுவன் ஒப்பந்தம் ஆனார். கதாநாயகியாக அதிதி ஷங்கர் ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு விஷ்ணுவர்தன் தமிழில் படம் இயக்குகிறார். தலைப்பை பார்க்கும் விஷ்ணுவர்தன் இயக்கிய சர்வம் போல இதுவொரு ஃபீல்குட் காதல் படமாக இருக்கும் எனத் தெரிகிறது.