தொடர்புடைய செய்திகள்
- ஆகஸ்ட் 23ஆம் தேதி மநீம செயற்குழு கூட்டம்: விஜய் கொடி அறிமுகம் செய்யும் அடுத்த நாளில் ஏன்?
- 'தி கோட்' விஜய் போல படங்களில் நடிகர்களை டீ-ஏஜிங் மூலம் இளமையாக காட்டுவது எப்படி?
- பரோட்டா மாஸ்டரிடம் பயிற்சி எடுக்கும் விஜய் சேதுபதி… எதற்குத் தெரியுமா?
- பிரேமலதாவை நேரில் சந்தித்த விஜய்! கேப்டன் கேமியோ உறுதி? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
- இயக்குநர் திரவ் இயக்கத்தில் திரவ்-நிகிலா- விஜய்- விபிதா நடித்துள்ள படம் ’டோபமைன் @ 2.22’!
தியேட்டர்களில் கட்சிக் கொடி.! விஜயின் மாஸ்டர் ப்ளான்..!!
கோட்' திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் கட்சி கொடியேற்றி கொண்டாட விஜய் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.
நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். தவெகவின் முதல் மாநாட்டை மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் நடத்த விஜய் தரப்பினர் திட்டமிட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது விக்கிரவாண்டியில் முதல் மாநாட்டை நடத்தப்போவதாகவும் அதற்கு முன்னர் தவெகவின் கொடியை விஜய் அறிமுகம் செய்வார் எனவும் கூறப்பட்டது.
மேலும் கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்த பிறகு, அனைத்து பகுதிகளிலும் கொடியேற்று நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது. தவெக கொடியில் உள்ள நிறங்கள், மற்றும் வாகை மலர் இடம்பெறுவது குறித்து விஜய் தரப்பில் ஆலோசனைகள் நடைபெற்று வந்தது. நேற்று நடிகர் விஜயின் தவெக கட்சியின் கொடி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. அந்த கொடியில் மஞ்சள் நிறத்தில் விஜயின் முகத்துடன் கட்சி கொடி காட்சியளிக்கிறது.
இந்நிலையில் நாளை மறுநாள் (22ஆம் தேதி) தமிழக வெற்றி கழகத்தின் கொடியை விஜய் அறிமுகம் செய்வார் என தகவல் வெளியானது. விஜய் ஏற்றவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும் என சொல்லப்படுகிறது.
இதனிடையே அடுத்த மாதம் 'தி கோட்' திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் கட்சி கொடியேற்றி கொண்டாட விஜய் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். தியேட்டருக்கு வரும் சுமார் ஐம்பது லட்சம் மக்களிடம் கட்சி கொடியை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே விஜயின் மாஸ்டர் பிளான் என சொல்லப்படுகிறது.
