வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 ஜூலை 2024 (11:23 IST)

அடுத்த மாஸ்டர் பீஸ் தயார்! புதிய கெட்டப்பில் தனுஷ்! - குபேரா பட தனுஷ் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

Dhanush

இன்று நடிகர் தனுஷின் பிறந்தநாளில் குபேரா படக்குழு வெளியிட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி வருகிறது.

 

 

தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் நடிகர்களில் முக்கியமானவர் தனுஷ். அவரது நடிப்பால் இந்தியை கடந்து ஹாலிவுட் வரை பல படங்களில் நடித்து வருகிறார். தனுஷிற்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் காம்போ படங்களில் பணியாற்றி வருகிறார் தனுஷ்.

 

தனுஷே நடித்து இயக்கிய ராயன் படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. அடுத்ததாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார். மேலும், தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா படத்திலும் நடித்து வருகிறார்.
 

 

இந்த படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இன்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷின் போஸ்டரோடு பிறந்தநாள் வாழ்த்தை படக்குழு தெரிவித்துள்ளது. இந்த புதிய லுக் மார்ச் மாதம் வெளியிட்ட குபேரா ஃபர்ஸ்ட் லுக் வீடியோவில் வெளியானதுதான் என்றாலும், தனுஷின் பிறந்தநாளான இன்று இது வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K