செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 21 மார்ச் 2023 (19:52 IST)

ரயில்நிலையத்தில் கீழே விழுந்து உயிரிழந்த பிரபல நடிகர்

paul grand
ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகர் பால் கிராண்ட் இன்று ரயில்நிலையத்தில் சரிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் பால் கிராண்ட்.. இவர், ஸ்டார் வார்ஸ் ஆப் தி ஜேடி, ஹாரி பாட்டர் அண்ட் தி சோர்சர்ஸ் ஸ்டோன், ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

இந்த நிலையில்,. இன்று இங்கிலாந்து நாட்டின் லண்டன்  நகரிலுள்ள கிங்ஸ் கிராஸ் நிலையத்திற்கு வெளியே நின்றிருந்தபோது, நடிகர் பால் கிராண்ட் திடீரென்று கீழே விழுந்து மயக்கமடைந்தார்.

அருகிலிருந்த போலிஈஸார், அவரை மீட்டு மருத்துவ்மானியில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறிவிட்டனர்.

அவரது மரணம் ஹாலிட் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு  சினிமாத்துறையினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.