1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 3 மார்ச் 2023 (19:02 IST)

பிரதமர் மோடியைச் சந்தித்த இங்கிலாந்து முன்னாள் வீரர்

modi- peterson
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சன்  இன்று,  பிரதமர் மோடியைச் சந்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பீட்டர்சன்.   மத்திய வெளியுறவுத்துறை சார்பில், டெல்லியில் நடந்தப்படவுள்ள மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளார்.
நேற்று பீட்டர் சன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்த புகைப்படத்தையும் அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அதில், ’’வசீகரிக்கும் உரையாடல், கருணை, பரிவு, ஊக்கமூட்டுகின்ற மனிதர்’’ என்று அமித்ஷாவை அவர் புகழ்ந்து, நன்றி’’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்துள்ளார் பீட்டர்சன்.

இத்குறித்து, தன் டுவிட்டர் பக்கத்தில், ’’உங்களைக் காண வேண்டுமென்று நான் காத்திருக்கிறேன்..தொற்றிக் கொள்ளும் உங்களின் புன்னகைக்கும், கைக்குலுக்குதலுக்கும் நன்றி’’ என்று டுவீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர், 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8181 ரன்கள் அடித்து, 47.29 சராசரி வைத்துள்ளார். 136 ஒருநாள் போட்டிகளில் விளையாடி , 4440 ரன்கள் அடித்து, 40.73 சராசரி வைத்துள்ளார். 37 டி-20 போட்டிகளில் விளையாடி 1176 ரன்கள் அடித்திருந்தார்.  ஐபிஎல் –ல் 36 போட்டிகளில் விளையாடி 1001 ரன் கள் அடித்துள்ளார்.

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை விளையாடிய பீட்டர்சன், பேட்டிங் மட்டுமின்றி சிறந்த பந்துவீச்சாளராகவும் செயல்பட்டு, அணியின் வெற்றிக்கு உதவியவர் ஆவார்.

தற்போது, பீட்டர்சன் கிரிக்கெட் வர்ணனையாளராகவும், ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.