விஜய் வீட்டிற்கு அருகில் வீடு வாங்கிய பிரபல நடிகர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் ஜெயம்ரவி. இவர் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார், குறிப்பாக இவர் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி வருவது ரசிக்ரகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பூமி படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், நடிகர் விஜய் குடியிருக்கும் சென்னை அடுத்துள்ள நீலாங்கரையில் நடிகர் ஜெயம் ரவியும் வீடு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவர் நடிப்பில் அடுத்து அகிலன் படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.