ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 30 ஜூன் 2022 (18:25 IST)

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு திருமணம் எப்போது? புதிய தகவல்

sruthihasan
தமிழ் சினிமாவில் 7 ஆம் அறிவு படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார். இப்படத்தை அடுத்து 3, புலி, வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

தற்போது, கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல்ஸ் பட இயக்குனர் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார்.

சமீபகாலமாக அவர் , கார்டூனிஸ்ட் சாந்தனு ஹசாரிகாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதலங்களில் வைரலானது. இந்த நிலையில்,  அவரது திருமணம் குறித்த  நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு தகவல் தெரிவித்துள்ளார்.

அதில், எனக்கு திருமணம் குறித்த ஐடியாவும் இல்லை. சாந்தனு ஹசாரிகாவுடன் எனக்கு நெருக்கமான மற்றும் சுமூகமாக உறவு  தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், அவர்  விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடித்த லாபம் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தகக்து.