வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (15:56 IST)

அஜித்துக்காக எழுதிய கதையை விஜய் சேதுபதி காதில் போட்ட விக்னேஷ் சிவன்?

விக்னேஷ் சிவன் அஜித் படத்தில் இருந்து கடைசி நேரத்தில் நீக்கப்பட்டதால் அடுத்து அவர் இயக்கும் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் ட்விட்டரில் தன்னுடைய பயோவில் “அஜித் 62 இயக்குனர்” என்ற டேக்கை நீக்கி இருந்தார். அதன் பின்னர் இப்போது தன்னுடைய ப்ரொபைல் புகைப்படமாக அஜித் புகைப்படத்தை வைத்திருந்ததையும் நீக்கியுள்ளார்.

இந்நிலையில் விக்னேஷ் சிவன், இப்போது அஜித்துக்காக உருவாக்கிய கதையை விஜய் சேதுபதிக்கு சொல்லி, அவரை சம்மதிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.