96 பட இளம் ஜோடி ஆதித்யா, கௌரி நிஜ காதலர்களா...?
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்த படம் ‘96’. மிகுந்த எதிர்பார்ப்புகளோடு கடந்த 4ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றள்ளது.
96 படத்தில் நடித்துள்ள இளம் நடிகர் ஆதித்யா பாஸ்கர், கௌரி ஆகியோர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவின் வேடத்துக்கு மிகவும் கச்சிதமாக பொறுந்தியதாக பலர் பாராட்டினர்.
இப்படத்தின் வெளியீடுக்கு பிறகு நடிகர் ஆதித்யா பாஸ்கரை கௌரி காதலிப்பதாக பல வதந்திகள் வெளியாகியுள்ளது.
கௌரியின் பிறந்தநாளுக்கு, நடிகர் ஆதித்யா பாஸ்கர் இன்ஸ்டாகிராமில் கௌரிக்கு ’ஐ லவ் யு’ என குறிப்பிட்டு வாழ்த்து வெளியிட்டார். இதையடுத்து இருவரும் நிஜக்காதலர்களாகிவிட்டார்கள் என்ற தகவல்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதை குறித்து விளக்கமளித்துள்ள நடிகை கௌரி “ஆதித்யா பாஸ்கரை நான் காதலிக்கவில்லை. ராம், ஜானுவாக திரையில் மட்டும் காதலர்களாக நடித்தோம், நிஜத்தில் இல்லை. ஆதலால் தவறான செய்திகள் பரப்புவதை நிறுத்துங்கள். ” என வேண்டுகோள் விடுத்துள்ளார் நடிகை கௌரி.