1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 6 அக்டோபர் 2018 (19:48 IST)

சம்பளத்தை குறைக்க ரெடி: திரிஷா!

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகி இருப்பவர் திரிஷா. இவர் கோலிவுட்டின் முன்னணி நாயகர்ளான கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பெரும்பாலான ஹீரோக்களுடன் நடித்திவிட்டார். தற்போது ரஜினியுடன் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில், விஜய் சேதுபதி ஜோடியாக திரிஷா நடித்துள்ள 96 படம், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் திரிஷாவின் நடிப்புக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.
 
தற்போது திரிஷா ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். அதாவது சம்பளத்தை குறைத்துக்கொள்ள தயார் என அறிவித்துள்ளார் திரிஷா. திரிஷாவின் இந்த முடிவு சக நடிகைகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.