திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 20 நவம்பர் 2018 (10:10 IST)

காதலி என நினைத்து உல்லாச அழகியுடன் பழகிய வாலிபர்: 10 லட்சம் அபேஸ்

நெல்லையில் வாலிபர் ஒருவரை அவரது காதலி ஏமாற்றி 10 லட்சத்தை ஏப்பம் விட்டுள்ளார்.
நெல்லையை சேர்ந்த உமா என்ற பெண் நாகர்கோவிலில் உள்ள கார் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வந்தார். அப்போது இவருக்கு சோதிராஜா என்ற நபருடன் பழக்க ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்தனர்.
 
இந்த பெண் அவ்வப்போது சோதிராஜாவிடம் குடும்ப சூழ்நிலையை கூறி பணம் பறித்து வந்துள்ளார். சோதிராஜாவும் நாம் திருமணம் செய்துகொள்ளும் பெண் தானே, நாம் செய்யாமல் யார் செய்வா என்று அவருக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளார். மேலும் கிட்ட தட்ட 13 பவுன் தங்க நகைகள் என மொத்தம் 10 லட்சத்தை பறித்துள்ளார் அந்த பெண்.
 
ஒரு கட்டத்தில் உமா, சோதிராஜாவிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதுகுறித்து சோதிராஜா உமாவிடம் கேட்டபோது, நம் காதலுக்கு பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தமக்கு வேறு ஒருவருடன் திருமணமாகிவிட்டது என கூறியுள்ளார்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த சோதிராஜா தனது பணத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளார். உமாவும் தாம் பணத்தை திரும்ப தருகிறேன் என கூறியுள்ளார். ஆனால் சொன்னபடி உமா பணத்தை கொடுக்காததால் சோதிராஜா உமாவின் கணவரிம் சென்று நடந்தவற்றை கூறியுள்ளார். ஆனால் அவரோ சோதிராஜாவை மிரட்டி அனுப்பியுள்ளார்.
 
இந்நிலையில் இதுகுறித்து சோதிராஜா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தாம் உமாவிற்கு வழங்கிய அனைத்து பொருட்களுக்கும் ஆதாரம் இருக்கிறது என கூறிய அவர் அதனை காவல் நிலையத்தில் சமர்ப்பித்தார்.
 
இதையடுத்து போலீஸார் உமாவையும் அவரது கணவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.