வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 29 ஆகஸ்ட் 2018 (15:06 IST)

யூடர்ன் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் சூப்பட் ஹிட் அடித்த 'யூ டர்ன்' தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

த்ரில்லர் கதையாக இதைப் பவன் குமார் என்பவர் இயக்கியிருந்தார்.  அவரே  தமிழில் ரீ மேக் செய்துள்ளார். இதில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் கேரக்டரில் நடிகை சமந்தா நடித்துள்ளார். ஆதி,  நரேன், நடிகை பூமிகா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.  கன்னடத்தில் இசையமைத்த பூமச்சந்திரா தமிழுக்கும் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் யூ டர்ன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 31ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 13ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று யூடர்ன் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.